கடந்த வாரம் ஜீனியர் விகடனில் ஒருப்படியான ஒரு விசயம் என்னவென்றால் தாமரையின் பேட்டியாகும்..நடுப்பக்கம் நடிகைகைளின் சாப்பாட்டுவிசயத்தை போட்டு பத்திரிக்கை உலக ஜனநாயகத்தை காப்பாற்றியது வேற விசயம்.கொஞ்ச காலமாக விகடன் பத்திரிக்களை படித்து வருபவர்களுக்கு ஒரு விசயம் நன்றாக புலப்படும். அது முழுக்க முழுக்க ஜெயலலிதாவிற்க்கு சார்பாக எழுதுவதை காணலாம்.விகடன் நடுநிலைமைகார பத்திரிக்கை என்று வாதாடலம்.அப்படியென்றால் ஏன் நடுநிலையாக எழுதியை ஞானியை வெளியேற்ற வேண்டும்.தமிழருவி மணியனை வைத்து வாக்காளர் மனதை மாற்றுகிற வித்தையும் செய்கிறது.ஞானிப் போன்று நடுநிலைவாதியை வைத்து செய்து இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.தமிழருவி மணியன் ச்சீய் இந்த பழம் புளிக்கும் கதையாய் தாவிக்கொண்டுஇருந்தவர்.இப்போது எந்த மரத்திலும் இடம் இல்லாமல் ஜீ.வி நிழலில் ஒதுங்கி இருக்கிறார்.கவிஞர் தாமரையின் பேட்டியை அனைவரும் படிக்கவேண்டும்.அதில் சொல்லியிருப்புது 100க்கு 100 உண்மை.ஈழதழிழர்களுக்க உயிரைக்கொடுப்போம் என்று சொல்லிக் கொண்டுஇருக்கிற சீமானும் வை.கோவும் தாமரையின் கருத்தை பின்பற்றுங்கள் . காங்கிரஸ ஒழிக்கவேண்டுமானல் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்கிறது.என்ன கொடுமை சீமான் சார்..ஏனென்றால் அம்மையாருக்கு எந்த காலத்திலும் இலங்கை மக்களுக்காக நடந்தது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.விடுதலை புலி இயக்கத்தை ஒழிக்க அம்மையார் எடுத்த முயற்சியை நாடு அறியும்.கடைசி தேர்தலில் கூட ஓட்டுக்கு வேண்டிதான் ஈழதமிழர்களுக்காக கண்ணீர் வடித்தது என்பதை சிறுகுழந்தை கூட அறிந்துக்கொள்ளும்.இத்தனை வயதாகியும் உங்களால் புரிந்துக்கொள்ளமுடியாது என்பது ஆச்சரியமாக உள்ளது.ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.சரி அடுத்த முறை காங்கிரசும் அ.தி.மு.க வும் கூட்டணி வைத்தால் என்ன செய்வீர்கள்.
1.சினிமா எடுக்க போவீர்களா?
2.அ.தி.மு.கவிற்கு ஆதரவாக நடப்பீர்களா?
3.கருணாநிதிக்கு ஆதரவாக பேசுவீர்களா?
4.காங்கிரஸ் தலைவர் கழுத்தில் தோளில் சால்வை போடுவீர்களா?
இதில் ஒன்று கண்டிப்பாக நடக்கும். தன்த்துவமாக கட்சியை நடத்துங்கள் உங்களுக்கு என்று கொள்கைகளை ஏற்படுத்திக்கோள்ளுங்கள். ஆனால் தி.மு.க (அ) அ.தி.மு.க என்ற ஊழல் முதலைகளின் வாயில் சிக்கியவர்கள் வெளிய வரமுடியாது என்பது வரலாற்று உண்மை.முதலைகளின் வாயை கிழித்துக்கொண்டு வாருங்கள் .அல்லது நானும் என் இயக்கமும் இப்படிதான் இருப்பேன் என்றால் தயவு செய்து செகுவாரா பெயரையோ,படத்தையோ (அ) பெரியார் படத்தையோ,பெயரையோ தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்.ஏனென்றால் அவர்களை கேவலப்படுத்தவேண்டாம். நேரம் உள்ளது. தயவு செய்து திருந்துங்கள்.இல்லயென்றால் இதையெல்லாம் விட்டுவிட்டு நடிக்கப்போகலாம். ஏனென்றால் நடிப்பு நன்றாக வருகிறது. இயக்கம் இத்தனை வருடம் ஆகியும் அது சரிப்பட்டுவரவில்லை.என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அதனால அந்தபக்கம் போக வேண்டாடம்னு நினைக்கிறேன்.