தமிழ்நாட்டு கம்யுனிஸ்ட்களின் கடந்த 20 வருட சரித்திரத்தை பார்க்கும்போது எம்எல்ஏ சீட்டுக்காக தங்களுடைய தன்மானத்தை அடகுவைப்பவர்கள் என்பது நன்றாக புலப்படும்.திருடனுக்கு தண்டனை தருவதை விட அதற்கு தோள் கொடுப்பவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்கவேண்டும்.தி.மு.க,அ.தி.முக. என ஊழல் கட்சிகளை மாற்றி மாற்றி அரியனை ஏற்றுவதிலில் கம்யுனிஸ்ட்களின் பங்கு பெரும்பங்கு ஆகும்.உண்மையான கம்யுனிஸ்ட் எவனும் ராஜாக்களுக்கும் ராணிகளுக்கும் பல்லாக்கு துக்க மாட்டார்கள்.இவர்கள் கட்சி இத்தனை ஆண்டுகளில் ஒரு வளர்ச்சியையும் அடையவில்லை.அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை என்பது உண்மை.கம்யுனிஸ்ட்கள் என்றால் போராட்ட குணம் மிக்கவர்கள் பதுங்கமாட்டார்கள் யாரையும் எதிர்த்து போரிடுவார்கள் என்று குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்ககூட பயமாக இருக்கிறது.எங்களுக்குன்னு ஒண்ணும் சம்பாதிக்கலை நடந்துதான் போறோம்ன்னு டயலாக் விட்டுட்டு கொஞ்சம் நேரம் பார்த்தால் ஆட்களை காணாது, போயஸ் தோட்டத்திலேயே (அ) கோபலபுரத்திலேயே 12 சீட்டுக்காக இவர்களை காணலாம்.தமிழ்நாட்டு மக்கள் விஜயகாந்தையோ (அ) வை.கோ.வை கூட நம்புவார்கள் ஆனால் இவர்களை நம்பமாட்டார்கள் .ஏனென்றால் தமிழ்நாட்டு கம்யுனிஸட்கள் அடுத்தவனுடைய தோளிலியே ஏறி பழகிவிட்டார்கள். ,இனிமேல் என்ன நடக்கும் என்றால் அ.தி.மு.க ஆட்சி ஏறும்.வழக்கம்போல காட்சிகள் தொடரும்
1 comments:
தங்களிடமிருந்து நல்ல அரசியல் விமர்சன கட்டுரையினை கோவை செய்திகல் எதிபார்கிறது.
தங்களின் வலைபூ சிறப்பு. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Post a Comment