March 27, 2011

திருடனுக்கு தோள் கொடுப்பவர்கள்

தமிழ்நாட்டு கம்யுனிஸ்ட்களின் கடந்த 20 வருட சரித்திரத்தை  பார்க்கும்போது எம்எல்ஏ சீட்டுக்காக தங்களுடைய தன்மானத்தை அடகுவைப்பவர்கள் என்பது நன்றாக புலப்படும்.திருடனுக்கு தண்டனை தருவதை விட அதற்கு தோள் கொடுப்பவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்கவேண்டும்.தி.மு.க,அ.தி.முக. என ஊழல் கட்சிகளை மாற்றி மாற்றி அரியனை ஏற்றுவதிலில் கம்யுனிஸ்ட்களின் பங்கு பெரும்பங்கு ஆகும்.உண்மையான கம்யுனிஸ்ட் எவனும் ராஜாக்களுக்கும் ராணிகளுக்கும் பல்லாக்கு துக்க மாட்டார்கள்.இவர்கள் கட்சி இத்தனை ஆண்டுகளில் ஒரு வளர்ச்சியையும் அடையவில்லை.அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை என்பது உண்மை.கம்யுனிஸ்ட்கள் என்றால் போராட்ட குணம் மிக்கவர்கள் பதுங்கமாட்டார்கள் யாரையும் எதிர்த்து போரிடுவார்கள் என்று குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்ககூட பயமாக இருக்கிறது.எங்களுக்குன்னு ஒண்ணும் சம்பாதிக்கலை நடந்துதான் போறோம்ன்னு டயலாக் விட்டுட்டு  கொஞ்சம் நேரம் பார்த்தால் ஆட்களை காணாது, போயஸ் தோட்டத்திலேயே (அ) கோபலபுரத்திலேயே 12 சீட்டுக்காக இவர்களை காணலாம்.தமிழ்நாட்டு மக்கள் விஜயகாந்தையோ (அ) வை.கோ.வை கூட நம்புவார்கள் ஆனால் இவர்களை  நம்பமாட்டார்கள் .ஏனென்றால் தமிழ்நாட்டு கம்யுனிஸட்கள் அடுத்தவனுடைய தோளிலியே ஏறி பழகிவிட்டார்கள். ,இனிமேல் என்ன நடக்கும் என்றால் அ.தி.மு.க ஆட்சி ஏறும்.வழக்கம்போல காட்சிகள் தொடரும்

March 26, 2011

சட்டபடி குற்றம் கண்டிப்பாக வெள்ளிவிழாதான்

படம் ஆரம்பிக்கிற ஸ்பீடு இருக்கே செம ஸ்பீடு படத்தில யாரு ஹீரோ , ஹீரோயின் கண்டுபிடிப்பதற்குள்ள படமே முடிஞ்சுடுது.ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லுகாஸ் இவங்க எல்லாம் படம் எடுப்பதை நிறுத்திவிட்டு அண்ணண் சந்திரசேகரிடம் அசிஸ்டெண்ட சேரலாம்.அப்படி ஒரு படம்  அண்ணண் சந்திரசேகர் எப்பவுமே நீதிபதிகள் போலிஸ்னு போட்டு தாக்குவாறு ஆனா இந்தமுறை நீதிபதிகள் போலிஸ் நல்லவங்க அரசியல்வாதிங்க மோசமானங்கனு யாரும் கண்டுபிடிக்காத கன்செப்ட்யோட பெரிய நட்சத்திரை பட்டாளத்தையும் கூட்டிக்கிட்டிவந்திருக்கிறாரு.இதில பாவம் யாருன்ன சத்தியராஜ்தான் டைரக்டரு பேச்சை கேட்டு  சுருட்டு பிடிச்சதுதான் மிச்சம்.கதையின்னு  கட்ட எந்த  கதையைசொல்ல  ஏன்னா அத்தனை  கதையிருக்கு  சத்தியராஜ்  வேறு  செகுவெரா  மாதிரி டிரஸஸை போட்டுட்டு ஒரு தினுசா  அலையியாரு  படத்தில  கொஞ்சமாவது  மனசுல  நிற்குறது யாருன்ன லிவிங்ஸ்டனும் சீமானும்தான் சீமான் இரண்டு சீனுயில வந்தாலும்
மனுசன் கலக்கிட்டாரு தயவு செய்து ஒரு வேண்டுக்கோள் ஓசில  டிக்கெட்  கிடைச்சாலும் தப்பி தவறி படத்துக்கு போகதிங்க......

முதல் பதிவு

இது தான் என்னுடைய முதல் பதிவு கண்டிப்பாக நிறைய தவறுகள் இருக்கும். என்ன பண்ண வேறவழியில்லை எல்லாரும் மாறி எனக்கும் ஆசைதான். எப்படியோ நிறைவேறியிடுச்சு
Code by : paid web directory